

பாரேலி,
உத்திர பிரதேசத்தில் அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுவன் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்.
சம்பவத்தன்று அந்த 8 வயது சிறுமி வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த மோசமான செயலில் அவன் ஈடுபட்டதாக தெரிகிறது. சம்பவம் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவனிடன் நடத்திய விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டான்.
ஏற்கனவே கத்துவா மற்றும் உன்னோவ் கற்பழிப்பு சம்பவங்களில் ஏற்பட்ட கடும் சீற்றத்திற்கு மத்தியில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது வேதனை தருவதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசாங்கம் ஏப்ரல் 21-ம் தேதி அன்று போக்சோ சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், 12 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சம்பங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அனுமதியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.