15 ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகில் நுழைய முயல்வதாக தகவல் : கேரள கடற்கரை பகுதிகள் தீவிர கண்காணிப்பு

இலங்கையில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 15 பயங்கரவாதிகள் வெள்ளை நிற படகில் மினிகாய் தீவு மற்றும் லட்சத்தீவுகளுக்கு செல்வதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
15 ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகில் நுழைய முயல்வதாக தகவல் : கேரள கடற்கரை பகுதிகள் தீவிர கண்காணிப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் திருச்சூர், கோழிக்கோடு ஆகிய கடற்கரை பகுதிகளில் இதைத்தொடர்ந்து கடலோர காவல்படை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகன சோதனையும், ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

கடலில் சந்தேகப்படும்படியான படகுகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களிடமும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com