மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 15 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 3 வெவ்வேறு சாலை விபத்துகளில் 15 பேர் பலியாகியுள்ளனர். #MaharashtraAccident
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 15 பேர் பலி
Published on

மும்பை,

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லகானி என்னுமிடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர். அதே போல் ராய்காட் மாவட்டத்தின் மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி மீது டெம்போ பயங்கரமாக மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அதே மாவட்டத்தின் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தர்னாசிவாடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய மற்றொடு விபத்தில் இருவர் மரணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 3 வெவ்வேறு சாலை விபத்துகளில் 15 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துகளுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com