ஜம்மு-காஷ்மீரில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழப்பு - சிறப்பு விசாரணைக்கு குழு ஆய்வு

மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக்கு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழப்பு - சிறப்பு விசாரணைக்கு குழு ஆய்வு
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் மர்ம காய்ச்சல் காரணமாக 15 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். மேலும் ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி நடைபெற்ற விருந்து கலந்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதில் 5 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 12-ந்தேதி மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதில் 3 பேரும், வேறொரு குடும்பத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டு அதில் 7 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சார்பில் மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்கொண்ட உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் தொற்றுநோய் பரவல் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மர்ம காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, எஸ்.பி. வஜகத் ஹுசைன் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com