பாராசிட்டமால் உட்பட15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு தடை.. கர்நாடக அரசு அதிரடி


பாராசிட்டமால் உட்பட15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு தடை.. கர்நாடக அரசு அதிரடி
x
தினத்தந்தி 26 Jun 2025 6:59 PM IST (Updated: 26 Jun 2025 7:03 PM IST)
t-max-icont-min-icon

உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில மருந்து பரிசோதனைக் கூடத்தின் ஆய்வில், இந்த பொருட்கள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டு ராவ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மக்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தினார். இந்த மருந்துகள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story