

கொச்சி
3 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த என்ஜினீயரை கைது செய்ய கேரள போலீசார் சென்னை வருகின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர் சரத் சுப்பிரமணியன். அப்போது பொதுமக்கள் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வந்துள்ளார்.
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவரான அவரை, கடந்த ஜூலை இறுதியில் சென்னை விமான நிலையத்தில் வைத்து, தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவரை கைது செய்து விசாரிப்பதற்காக, கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சென்னைக்கு வருகின்றனர்.
சரத் மீது 70-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அவர்கள் சென்னை வரவுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட அவரை, நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.