ராஜஸ்தானில் இன்று 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் இன்று 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் இன்று 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராஜஸ்தானில் இன்று 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ராஸ்தான் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,227 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் ராஜஸ்தானில் இதுவரை கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,095 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் இன்று மட்டும் 546 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,220 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் தற்போது 13,912 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com