டெல்லி சட்டமன்ற தேர்தல் : மந்தமான வாக்குப்பதிவு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் காலை 12 மணி நிலவரப்படி 15.68 சதவீத வாக்குப்பதிவாகி உள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் : மந்தமான வாக்குப்பதிவு
Published on

புதுடெல்லி

70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையாற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

லோதி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்குசாவடியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வாக்கைபதிவு செய்தார்.

டெல்லியில் மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 10 மணி நிலவரப்படி டெல்லியில் 4.33 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 6.96 சதவீத வாக்குப்பதிவவாகி உள்ளது. 12 மணி நிலவரப்படி 15.68 சதவீத வாக்குப்பதிவாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com