பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி; முதல்-மந்திரி இரங்கல்

பீகாரில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி; முதல்-மந்திரி இரங்கல்
Published on

பாட்னா,

பீகாரில் பல நகரங்களில் இடி, மின்னல் தாக்கியதில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பீகாரில் கடந்த 17ந்தேதி, இடி, மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ள முதல்-மந்திரி நிதீஷ் குமார் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

பேரிடர் மேலாண் கழகத்தின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார். வானிலை மோசமடைந்துள்ள சூழலில், மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com