சத்தீஷ்காரில் 16 நக்சலைட்டுகள் சரண்

நாராயண்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் பகுதி மத்தியபிரதேசம், மராட்டியம் தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டிய சில பகுதிகளை உள்ளடக்கியது. சத்தீஷ்கார் மாநிலத்தில் நாராயண்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
2026-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் நக்சலைட்டை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டு மாநில அரசு உதவியுடன் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதனால் ஆயரக்கணக்கான நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நாராயண்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் முன் 16 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். 16 நக்சலைட்டுகளும் பாதுகாப்பு படை நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவல்களை சேகரிப்பது, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் தலா ₹50 ஆயிரம் உதவி வழங்கப்பட்டது. மேலும் அரசின் மறுவாழ்வு உதவி அளிக்கப்படும்.






