சத்தீஷ்கரில் நக்சல்கள் 16 பேர் போலீசில் சரண்

பெண் உள்பட 16 நக்சல்கள் போலீசில் சரணடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக ஒழித்துக்கட்டப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சத்தீஷ்கரின் சுக்மா மாவட்டத்தில் பெண் உள்பட 16 நக்சல்கள் போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களில் 9 பேர் கெர்லபெண்டா கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் சரணடைந்ததன் மூலம், அந்த இடம் நக்சல் இல்லாத இடமாக மாறியுள்ளது என்று அதிகாரி கூறினார்.

இதனையடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடிக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, சுக்மா உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் 792 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com