காதலை ஏற்க மறுத்ததால் 16 வயது சிறுமி குத்திக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

சிறுமியை கத்தியால் குத்திய சமீரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காதலை ஏற்க மறுத்ததால் 16 வயது சிறுமி குத்திக்கொலை - வாலிபர் வெறிச்செயல்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள சாந்தினிபாகன் பகுதியில், 10-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி ஒருவர், பள்ளி முடிந்து தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை சமீர் தாஸ்(வயது 24) என்ற இளைஞர் வழிமறித்தார். அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சமீர் தாஸ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்து, வயிறு மற்றும் கைகளில் குத்தினார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி, சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அவரை அங்கிருந்தவரக்ள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில், சிறுமியை கத்தியால் குத்திய சமீரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த சமீர் தாஸ், தோம்ஜூர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். தனது காதலை சிறுமி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் சமீர் தாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com