ராஜஸ்தான்: கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை

கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான்: கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர், கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். நேற்று இரவு சக மாணவர்கள் அந்த மாணவரின் அறை கதவை வெகு நேரமாக தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் மற்றும் விடுதியின் காவலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது மாணவர் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மாணவாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் மற்றும் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டாவில் நடப்பாண்டில் அரங்கேறியுள்ள 16-அது தற்கொலை சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு கோட்டா நகரில் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com