உ.பி.அதிர்ச்சி சம்பவம்: உணவில் போதை மருந்து கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு உணவில் போதை மருந்துகலந்து கொடுத்து பாலியல்கொடுமை செய்ததாக பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.அதிர்ச்சி சம்பவம்: உணவில் போதை மருந்து கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை
Published on

புர்காஜி,

மேற்கு உ.பி.யின்முசாபர்நகர், புர்காஜி பகுதியில் சூர்யதேவ் பப்ளிக் ஸ்கூல் உள்ளது. பிரபல பள்ளிகளில் ஒன்றான இதில் பத்தாம் வகுப்பில் 29 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இவர்களுக்கான பயிற்சித் தேர்வு அருகிலுள்ள ஜிஜிஎஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் கடந்தமாதம் 19-ம்தேதி நடைபெற்றது.

இந்நிலையில் இதற்கு முதல்நாள் வகுப்புக்கு வந்தவர்களில் 17 மாணவிகளை மட்டும் சூர்யதேவ் பள்ளிவகுப்பில் நள்ளிரவு வரை படிக்கவேண்டும் என்று கூறி அங்கு தங்க வைத்துள்ளனர். இதையடுத்து இரவு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மயக்க நிலையில் இருந்த 17 மாணவிகள் தங்கள் வீட்டுக்கு திரும்பியபின் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஜிஜிஎஸ் பள்ளி முதல்வர் யோகேஷ் குமார்சவுகான், சூர்யதேவ் பள்ளி முதல்வர் அர்ஜுன்சிங் ஆகியோர் மீதுமாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். ஆனால் சம்மந்தப்பட்ட போபா காவல் நிலையத்தினர் அப்புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அத்தொகுதிபாஜக எம்எல்ஏ பிரமோத் உத்வலிடம் பெற்றோர் புகார் அளித்தனர்.அவரது தலையீட்டின் பேரில்முசாபர்நகர் மாவட்ட எஸ்எஸ்பி அபிஷேக் யாதவ் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து தலைமறைவாகி இருந்த ஜிஜிஎஸ் பள்ளி முதல்வர் யோகேஷ்குமார் மீது பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com