

நகாவன்,
அசாமில் நகாவன் மாவட்டத்தில் வன பகுதியில் 18 யானைகளின் உடல்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இதுபற்றிய தகவல் அறிந்து, வன அதிகாரிகள் அவற்றை மீட்டனர். தொடர்ந்து யானைகளின் திடீர் மரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அசாம் வன துறை மந்திரி பரிமள் சுக்லவைத்யா கூறும்பொழுது, முதற்கட்ட விசாரணையில் 18 யானைகளும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்து உள்ளன என தெரிய வந்துள்ளது.
அவற்றின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மையான காரணம் என்ன என்பது பற்றி தெரிய வரும். முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா உத்தரவின்படி, சம்பவ பகுதிக்கு நான் நாளை செல்ல இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.