ஏமனில் சிக்கி தவித்த 18 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஏமனின் நிஷ்துன் துறைமுகத்தில் சிக்கியிருந்த மாலுமிகள் 18 பேர் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.
Image Courtesy : @rpomumbai
Image Courtesy : @rpomumbai
Published on

புதுடெல்லி,

உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் இந்திய மாலுமிகள் 18 பேர் சிக்கி தவிப்பதாக வந்த தகவலையடுத்து, அவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக இந்திய மாலுமிகள் 18 பேரும் நேற்று நாடு திரும்பினர். அவர்கள் விமானம் மூலம் மும்பை வந்து சேர்ந்தனர்.

இது குறித்து மும்பையில் உள்ள பிராந்திய பாஸ்போர்டு அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏமனில் சிக்கி தவித்த 18 இந்திய மாலுமிகள் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்களின் இடைவிடாத முயற்சியால் மீட்கப்பட்டனர். கடந்த சில வாரங்களாக ஏமனின் நிஷ்துன் துறைமுகத்தில் சிக்கியிருந்த மாலுமிகள் 18 பேரும் நேற்று முன்தினம் தலைநகர் ஏடனுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், நேற்று அவர்கள் விமானம் மூலமாக மும்பை வந்தடைந்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com