சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரண்


சத்தீஸ்கரில்  18 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம்  சரண்
x

சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை அளிக்கபட்டுள்ளது.

சுக்மா,

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 18 நக்சலைட்கள் இன்று பாதுகாப்புப் படையினரிடம் சரண் அடைந்தனர். இவர்களில் 10 பேரின் தலைக்கு மொத்தமாக ரூ.38 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறியதாவது: "மாவோயிஸ்ட் சித்தாந்தம் வெறுமையானது மற்றும் மனித தன்மையற்றது என்று சரணடைந்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், உள்ளூர் பழங்குடியினர் மீதான வன்முறையிலும் உன்பாடில்லை என்றனர். இதுபோன்ற காரணங்களால் 18 நக்சலைட்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த நக்சலைட்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரும் அரசின் கொள்கையின்படி மறுவாழ்வு சலுகைகளைப் பெறுவார்கள்" என்று கூறினார்.

1 More update

Next Story