யூடியூப் வீடியோவை பார்த்து டயட் பின்பற்றிய இளம்பெண் உயிரிழப்பு

கடந்த 6 மாதங்களாக இவர் தண்ணீர் உணவுகளையே சாப்பிட்டது மட்டுமன்றி, பல நாட்கள் பசியுடன் இருந்ததால் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கியுள்ளது.
யூடியூப் வீடியோவை பார்த்து டயட் பின்பற்றிய இளம்பெண் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்,

உடல் பருமன் என்பது இப்போது உலகெங்கும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது அதிலும் இந்தியர்களிடையே உடல் பருமன் என்பது மேஜர் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆனால், எவ்வளவு முயன்றாலும் பலரால் எடையைக் குறைக்கவே முடிவதில்லை.இதற்கு காரணம் நாகரிகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் என்றே கூறலாம். அதுபோன்ற உணவு மற்றும் தின்பண்டங்களை சாப்பிடுபவர்கள் உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

இதன் காரணமாக இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது உள்ளிட்ட நோய்களுக்கு அவர்கள் ஆளாகின்றனா. இதற்காக உடல் எடையை குறைக்க பலரும் தீவிர முயற்சி செய்கின்றனா. அவ்வாறு செய்பவர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதுபோன்ற சம்பவம் ஒன்று கேரளாவில் அரங்கேறி உள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (வயது 18).

இவரது உடல் எடை அண்மை காலங்களில் அதிகாத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. எப்படி உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து தேடி .. தேடி..எடுத்து வீடியோவை பார்த்து வந்துள்ளார். மேலும் அந்த வீடியோக்களில் கூறுவது போல் உணவு பழக்கத்தை மாற்றி உள்ளாராம்.

அப்படி செய்து வந்த நிலையில், ஸ்ரீநந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் எடை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அவரை கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனா. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து டாக்டர்கள் சார்பில் கூறுகையில், ஸ்ரீநந்தா தொடர்ந்து உடல் எடையை குறைக்க குறைந்தளவு உணவு சாப்பிட்டு டயட் கன்ட்ரோல் செய்து வந்ததால் குடல் சுறுங்கியதாகவும், அதன் காரணமாக ஸ்ரீநந்தா உயிரிழந்ததாகவும் கூறினா. யூடியூப் பார்த்து டயட் மெயின்டெயின் செய்த இளம் பெண், உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com