

யுனாவோ,
உத்தரப்பிரதேசத்தின் சத்னி பால கேதா கிராமத்தில் 18 வயதான பெண் ஒருவர் அடையாளம் தெரியாத சில நபர்களால் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு வீட்டிலிருந்து பெண் ஒருவர் தனது சைக்கிளில் மார்க்கெட்டிற்கு புறப்பட்டு செல்கையில் அடையாளம் தெரியாத சில நபர்களால் எளிதில்
தீப்பற்றக்கூடிய திரவகம் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீஸ் கண்காணிப்பாளர் புஷ்பாஞ்சலி,
இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுஜித் பாண்டே மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதனிடையே பெண்ணின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உத்தர் சிங் ரதோர் தலைமையின் கீழ் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே பெண்ணின் இறப்புக் குறித்து கூடுதல் விவரங்கள் தெரிய வரும் என போலீசார் கூறினர்.