உத்தரபிரதேசத்தில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் 19 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் 19 பேர் உயிரிழப்பு
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று வீசியது. அப்போது இடிமின்னலும் தாக்கியது. இந்த சூறாவளியில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல வீடுகள், கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கியும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். இதுதவிர மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளனர். மைன்புரி மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 41 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் 8 கால்நடைகளும் இறந்துள்ளன. இந்த தகவலை மாநில நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார். முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், இந்த சூறாவளி மற்றும் மின்னலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பேற்றுள்ள மந்திரிகள் நிவாரண பணிகளை மேற்பார்வையிடும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com