சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.
சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலி
Published on

சென்னை,

நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய-மாநில அரசுகள் திணறி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன், நூற்றுக்கணக்கான மக்களை காவு கொண்டு வரும் இந்த கொடிய அரக்கனின் பிடியில் இருந்து மீள வழி தெரியாமல் மக்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

சாதாரண மக்கள் மட்டுமின்றி நாட்டை ஆளும் தலைவர்கள், நடிகர்கள் என பெரும் செல்வாக்கு படைத்தவர்களும் தினமும் கொரோனாவிடம் சிக்கி வருவது மேலும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இதனால் அந்த உயிர்க்கொல்லி நோய்க்கு எதிராக தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மக்களை அரசுகள் கேட்டுக்கொண்டு உள்ளன.

இப்படி கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் அது பற்றிய ஆய்வுகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக பெருநகரங்களில் கொரோனாவின் பரவல் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் சென்னை, மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களில் கொரோனா பரவல் விகிதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

* சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.

* ராஜீவ்காந்தி மருத்துவமனை- 9, கீழ்ப்பாக்கம்- 3, ஓமந்தூரார்- 4 பேர் உயிரிழந்தனர்.

* ஆயிரம் விளக்கு, நந்தம்பாக்கம் , போரூர் தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

* சென்னையில் கொரோனா உறுதியான 1,02,985 பேரில் 11,983 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1,357 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* சென்னையில் 59,17% ஆண்கள், 40.83% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,176 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 88,826 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

* சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.

* சென்னையில் 1,02,985 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 88,826 பேர் குணமடைந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com