பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக நலந்தாவில் 5 பேர் உயிரிழந்த நிலையில், வைஷாலியில் 4 பேரும், பங்கா மற்றும் பாட்னாவில் தலா 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஷேக்புரா, நவாடா, ஜெகானாபாத், அவுரங்காபாத், ஜமுய் மற்றும் சமாஸ்திபூர் மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிதிஷ் குமார், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com