நகைக்கடையின் சுவரை துளையிட்டு ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை; இளைஞர் கைது

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் ஷம்பல்வாடி பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையின் சுவரை துளையிட்டு கடந்த 8ம் தேதி மர்ம நபர் நுழைந்துள்ளார். பின்னர், நகைக்கடையில் இருந்து 1.75 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை அந்த நபர் கொள்ளையடுத்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு நகைகளை கொள்ளையடித்தது அஸ்வின் (வயது 19) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அஸ்வினை கைது செய்த போலீசார், இளைஞரிடமிருந்து கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






