கேரளாவில் மேலும் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கேரளாவில் கொரோனா பாதித்து 1,679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அவசியம் இல்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர்கள் முககவசம் அணிய வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story






