

இந்த சிலையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள், சிலைக்கு அருகே உள்ள பஞ்ச்முலி ஏரியில் படகு சவாரியும் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. இது சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே கடந்த 2 ஆண்டுகளாக முதலைகளை இடமாற்றம் செய்யும் பணிகளை மாநில வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏரியில் 60-க்கு மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கூண்டுகள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 194 முதலைகள் பிடிக்கப்பட்டு உள்ளன. இதில் கடந்த 2019-20-ம் ஆண்டில் மட்டுமே 143 முதலைகள் பிடிக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் சர்தார் சரோவர் அணையிலும், பாதுகாப்பு மையங்களிலும் விடப்பட்டு உள்ளன. ஏரியில் இன்னும் ஏராளமான முதலைகள் இருப்பதாகவும், அவற்றை இடமாற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் வன அதிகாரிகள் கூறியுள்ளனர்.