கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று - சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா

கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரொனா தொற்று - சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா
Published on

திருவனந்தபுரம்,

நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் இன்று புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 072 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 118 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். 62 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 15 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 102 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,108 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com