

ஜம்மு,
காஷ்மீர் சட்டமன்றத்தில் பாரதீய ஜனதாவின் ரமேஷ் அரோரா எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வ முறையில் பதிலளித்த முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 3 வருடங்களில் தீவிரவாதம் தொடர்புடைய சம்பவங்களில் 195 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அவர்களில் 2017ம் ஆண்டில் 78 பேரும், 2016ம் ஆண்டில் 74 பேரும் மற்றும் 2015ம் ஆண்டில் 43 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
#securitypersonnel #Kashmir