சரண் அடைய அவகாசம் கேட்ட சஜ்ஜன் குமாரின் மனு தள்ளுபடி

சீக்கிய கலவர வழக்கில் சரண் அடைய அவகாசம் கேட்ட சஜ்ஜன் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சரண் அடைய அவகாசம் கேட்ட சஜ்ஜன் குமாரின் மனு தள்ளுபடி
Published on

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஜ்ஜன் குமார் (வயது 73) மீது வழக்கு தொடரப்பட்டது.

இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 17-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக வருகிற 31-ந்தேதிக்குள் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

ஆனால் இந்த வழக்கில் சரணடைவதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை கால அவகாசம் தருமாறு சஜ்ஜன் குமார் தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும், தனது குடும்ப விவகாரங்கள் சிலவற்றை முடிப்பதற்கும் அவகாசம் தேவைப்படுவதாக அந்த மனுவில் சஜ்ஜன் குமார் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், இந்த மனுவை ஏற்று, சரண் அடைய கால அவகாசம் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com