உ.பி: முதல் காகிதமில்லா - மின்னணு நீதிமன்றங்கள் துவக்கம்

முதல் காகிதமில்லா - மின்னணு நீதிமன்றங்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும், அதன் கிளையான லக்னோ நீதி மன்றத்திலும் துவக்கி வைக்கப்பட்டது.
உ.பி: முதல் காகிதமில்லா - மின்னணு நீதிமன்றங்கள் துவக்கம்
Published on

அலகாபாத்

நீதிமன்றத்தை துவக்கி வைத்த உச்ச நீதிமன்ற நீதிபதியும், உச்ச நீதிமன்றத்தின் மின்னணு குழுவின் பொறுப்பாளருமான நீதிபதி மதன் பி லோகுர் இந்த வரலாற்று தருணம் ஒரு புரட்சியாகும். இதன் மூலம் நீதி வழங்கும் அமைப்பு நாடு முழுதும் மாற்றியமைக்கப்படும் என்றார். இனிமேல் ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் மின்னணு நீதிமன்றத்தைக் கொண்டிருக்கும் அதன் மூலம் நீதிமன்றங்களுடன் தொடர்பில் இருக்கும் அனைத்துத் தரப்பாருக்கும் நன்மையிருக்கும் என்றார்.

விரைவான, சிறப்பான நீதி வழங்கும் முறைமையை நாம் சாதிக்க வேண்டும் என்ற நீதிபதி மக்களின் எண்ணத்தை மாற்றியமைக்கும் என்றார். அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பாபாசாகேப் போஸ்லே நீதிமன்றத்தின் வரலாற்று மைல்கல் இந்நிகழ்வு என்றார். வழக்குகளின் பளு எனும் பிரச்சினை இதன் மூலம் தீர்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். மாவட்ட அளவில் இத்தகைய நீதிமன்றங்கள் அமைவதன் தேவையை எடுத்துக் கூறினார் மாநில தலைமை வழக்கறிஞர் ராகவேந்திர சிங்.

மாநில தலைமைச் செயலர் ராஜீவ் குமார் மாநிலத்தின் நீதி வழங்குதலை விரைவுபடுத்தும் என்றார்.

மின்னணு நீதிமன்றங்கள் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பராமரிப்பதால் காகித ஆவணங்களை பராமரிக்கத் தேவைப்படும் ஆட்கள் இல்லாமல் போவார்கள். மின்னணு முறையில் நீதிபதிகள் வழக்குகளின் பட்டியலை அறிய முடியும். வழக்குகள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும். தற்போது துவங்கப்பட்டுள்ள முறைமை ஒரு சில வகையான வழக்குகளை கையாளும் நீதிமன்றங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 5,000 வழக்குகள் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com