விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேர் கைது

மலேசியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேர் கைது
Published on

பெங்களூரு,

மலேசியாவில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒருவர் தனது உள்ளாடைக்குள் 2 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

அதாவது ரூ.1 கோடி மதிப்பிலான 1 கிலோ தங்க கட்டிகள் இருந்தது. அதை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் அவர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்த மற்றொரு விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வந்தார். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அந்த பயணி பிடிபட்டார். இதையடுத்து அவரிடம் சோதனை நடத்தியபோது, ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ-சர்டில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர் கடத்தி வந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் அந்த பயணியை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com