டெல்லியில் தொழிலதிபர்களை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்; 2 பேர் கைது

டெல்லியில் தொழிலதிபர்களை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் தொழிலதிபர்களை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்; 2 பேர் கைது
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ஓட்டல் உரிமையாளர், கட்டிட வல்லுனர், கட்டுமான அதிபர், ஏ.சி. விற்பனை உரிமையாளர்கள், மருத்துவர், பேக்கரி உரிமையாளர் உள்ளிட்ட வசதி கொண்ட பல தொழிலதிபர்களை தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு 2 பேர் மிரட்டி வந்துள்ளனர்.

இதன்படி ஒரு சம்பவத்தில், கடந்த வருடம் அக்டோபரில் பெண் ஒருவர் மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவர் என அறிமுகம் செய்து கொண்டு மருத்துவர் ஒருவரிடம் வந்துள்ளார். தொடர்ந்து அவரை சந்தித்த அந்த பெண் ஒரு நாள், தன்னால் மருத்துவமனைக்கு வர முடியாது. அதனால் தனது வீட்டிற்கு பரிசோதனை செய்ய வரும்படி அழைத்துள்ளார்.

அங்கு சென்ற மருத்துவருக்கு உணர்ச்சியை தூண்டும் ரசாயன பொருளை கலந்து குளிர்பானம் கொடுத்துள்ளார். இதன்பின் தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள தூண்டியுள்ளார். இதுபற்றிய வீடியோ ரகசிய கேமிராக்களை கொண்டு படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

இதன்பின் நூர் மஜார் (வயது 38) என்பவர் மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். பணம் தரவில்லை எனில் ஆன்லைனில் வீடியோ வெளியிடப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கும் நகல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் அச்சுறுத்தி உள்ளார்.

இந்த மிரட்டல்களுக்கு பணிவோரிடம், டெபிட் கார்டுகளை பொது இடங்களில் போட்டு செல்லும்படி கூறப்படுகிறது. இதன்பின் கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளது. பணம் கேட்டு மிரட்டும் வழக்கில் மஜார் பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மஜார் மற்றும் மகேந்திரன் (வயது 33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com