ஏரியில் மூழ்கி 2 சகோதரர்கள் சாவு

பீதர் அருகே ஏரியில் மூழ்கி 2 சகோதரர்கள் உயிரிழந்தனர்.
ஏரியில் மூழ்கி 2 சகோதரர்கள் சாவு
Published on

பீதர்:

பீதர் தாலுகா அலியாம்பர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினய் (வயது 20), வீரேஷ் (17). இவர்கள் 2 பேரும் சகோதரர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று கிராமத்தில் உள்ள ஏரியில் வினயும், வீரேசும் குளிக்க சென்று இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற வினயும், வீரேசும் நீச்சல் தெரியாததால் ஏரியில் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்து விட்டனர்.

அவர்கள் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல பீதர் அருகே ஹொன்னிகேரி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது 42). தொழிலாளியான இவர் நேற்று கிராமத்தில் உள்ள பள்ளியின் அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு மரத்தின் கிளை முறிந்து சித்தப்பாவின் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து கோல்கார், ஜனவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com