வந்தேபாரத் ரெயில் மோதி 2 எருமை மாடுகள் செத்தன

சித்ரதுர்கா அருகே வந்தே பாரத் ரெயில் மோதி 2 எருமை மாடுகள் செத்தன.
வந்தேபாரத் ரெயில் மோதி 2 எருமை மாடுகள் செத்தன
Published on

சிக்கமகளூரு:-

பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி இந்தியா முழுவதும் 5 வந்தே பாரத் ரெயில்களை அறிமுகம் செய்து வைத்தார். இதில் பெங்களூரு-உப்பள்ளி-தார்வார் வந்தே பாரத் ரெயில் திட்டமும் ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாவணகெரேவில் இந்த வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று வந்தே பாரத் ரெயில் ஒன்று எருமை மாடுகள் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு-உப்பள்ளி-தார்வார் வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று பெங்களூருவில் இருந்து தார்வாருக்கு வந்தே பாரத் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா ராமகிரி ப்பகுதியில் வந்தேபாரத் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் 2 எருமை மாடுகள் நின்று கொண்டிருந்தன.

இந்தநிலையில் அந்த மாடுகள் மீது வந்தேபாரத் ரெயில் மோதியது, இதில் தூக்கி வீசப்பட்ட மாடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் 2 மாடுகளின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அந்த மாடுகளின் உடலை உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் மாட்டின் உடலை வாங்க யாரும் வரவில்லை. இதையடுத்து இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com