ஒரே நாளில் 2 மத்திய மந்திரிகள் திடீர் ராஜினாமா....!

ஒரே நாளில் 2 மத்திய மந்திரிகள் திடீர் ராஜினாமா செய்து உள்ளனர்.
ஒரே நாளில் 2 மத்திய மந்திரிகள் திடீர் ராஜினாமா....!
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக முக்தார் அப்பாஸ் நக்வி இருந்து வந்தார். அவரது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்து உள்ளார்.

முக்தார் அப்பாஸ் நக்வி துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் உருக்குத்துறை மந்திரியாக ராம்சந்திர பிரசாத் சிங் இருந்து வந்தார். அவரது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்து உள்ளார்.

பீகார் முதல்-மந்திரி நீதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பிரதமர் மோடி அமைச்சரவையில் ஆர்.சி.பி.சிங் இடம் பெற்றிருந்தார்.

மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று ஒரே நாளில் 2 மத்திய மந்திரிகள் திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com