ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி, ஒருவர் காயம்

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி, ஒருவர் காயம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மூ - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்கள், தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், பயங்கரவாதிகள் துபாக்கிச்சூடு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகளில் ஒன்றான தேசிய மாநாட்டு கட்சியின் உறுப்பினர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு, அம்மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க பயங்கரவாதிகளே, இந்த துப்பாக்கிசூட்டை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com