மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 6,791 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சர்வேத்திலிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு அது 60 ஆக உயர்ந்திருக்கிறது. உலகலாவிய சூழல் அதிகரித்து வரக்கூடிய லைவாசி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவற்றை ஈடுகட்டுவதற்காக இந்த அகவலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com