அந்தமானில் 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
அந்தமானில் 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்
Published on

அந்தமான் நிகோபர்,

அந்தமான் நிகோபர் தீவில் கடல் பகுதியில், இன்று அதிகாலை 1.43 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

அந்தமான் கடலில் நேற்று மாலை 3.47 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 61 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் 24 மணிநேரத்தில் 2 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com