அரபி கடலில் 2 மீன்பிடி படகுகள் மோதல்; 8 மீனவர்கள் மாயம்

அரபி கடலில் 2 மீன்பிடி படகுகள் மோதி கொண்டதில் 10 மீனவர்கள் வரை மீட்கப்பட்டு உள்ளனர்.
அரபி கடலில் 2 மீன்பிடி படகுகள் மோதல்; 8 மீனவர்கள் மாயம்
Published on

வதோதரா,

குஜராத் மாநிலத்தின் கடலோரத்தில் அரபி கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகள் இன்று நேருக்கு நேராக மோதி கொண்டன. இந்த சம்பவத்தில் படகுகளில் இருந்த மீனவர்கள் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இதனை தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.

இதில், 10 மீனவர்கள் வரை மீட்கப்பட்டு உள்ளனர். எனினும், 8 மீனவர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை மோசமடைந்து, அதனால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது. காணாமல் போன மீனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com