

ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் அராரா கிராமத்தில் 2 சிறுமிகள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, தங்கள் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த 4 பேர். 2 சிறுமிகளையும் தடுத்து நிறுத்தி, அவர்களை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர்.
அவர்களை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக் கிச்சென்று 4 பேரும் கூட்டாக கற்பழித்தனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில், 4 பேரையும் 'போக்சோ' சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். 4 பேரும் ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் நீதி மன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.