

காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவல்காரர்களை இந்திய எல்லைக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம் அடைந்து உள்ளனர். பாகிஸ்தான் போர்நிறுத்த விதிகளை மீறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.