காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி 13 பேர் காயம்

இதில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி 13 பேர் காயம்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். 

ஜம்மு- காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவ இடத்தில் மீட்பு படையினர் போராடி 13 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உள்ளூர் மக்களும் விபத்து நடந்த உடனேயே மீட்பு பணி மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், உறவினர்களுடன் 15 பேர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com