மூதாட்டியின் ரூ.2¾ லட்சம் தங்கச்சங்கிலி திருட்டு

உடுப்பியில் மூதாட்டியின் ரூ.2¾ லட்சம் தங்கச்சங்கிலி திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மூதாட்டியின் ரூ.2¾ லட்சம் தங்கச்சங்கிலி திருட்டு
Published on

மங்களூரு;

 உடுப்பி டவுன் அம்பலபாடி பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி பாய் (வயது 62). இவர் நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் உள்ள ஜனாத்தன கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று இருந்தார்.

இதையடுத்து அவர் தரிசனம் செய்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மாயமாகி இருந்தது. இதைகண்டு அதிச்சி அடைந்த மூதாட்டி உடனே கோவிலுக்கு சென்று இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடன் கூறினார்.

உடனே அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் 2 பெண்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து அவர் உடுப்பி புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதில் திருடப்பட்ட தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.2.80 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com