அணுகுண்டு வச்சிருந்தா என்ன செய்வீங்க..? டெல்லி விமான நிலையத்தில் அடாவடியாக பேசிய நபர்கள் கைது

விமானத்திற்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் இருவரும் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அணுகுண்டு வச்சிருந்தா என்ன செய்வீங்க..? டெல்லி விமான நிலையத்தில் அடாவடியாக பேசிய நபர்கள் கைது
Published on

புதுடெல்லி:

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரண்டு நபர்கள், பாதுகாப்பு சோதனையின்போது அணுகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 5-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்காட்டைச் சேர்ந்த ஜிக்னேஷ் மலானி, காஷ்யப் குமார் ஆகியோர் தொழில் விஷயமாக டெல்லிக்கு வந்துள்ளனர். டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த சோதனைக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. "அணுகுண்டு கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள்?" என இருவரும் கேட்க, பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரையும் சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர். சோதனையில் அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

விமானத்திற்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் இருவரும் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com