உத்தரபிரதேச மாநிலத்தில் 2 மந்திரிகள் ராஜினாமா

உத்தரபிரதேச மாநிலத்தில் 2 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 2 மந்திரிகள் ராஜினாமா
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு நிதி மந்திரி ராஜேஷ் அகர்வாலும், பள்ளிக்கல்வி ராஜாங்க மந்திரி அனுபமா ஜெய்ஸ்வாலும் தங்கள் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அந்த மாநில மந்திரிசபை விஸ்தரிக்கப்பட இருந்ததும், முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமானதால், விஸ்தரிப்பு ஒத்தி போடப்பட்டதும் நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அங்கு மந்திரிசபை விஸ்தரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மந்திரிசபை விஸ்தரிப்பின்போது 12-க்கும் மேற்பட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com