சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் டிரக் மோதிய விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி, 3 பேர் காயம்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் டிரக் மோதிய விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் டிரக் மோதிய விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலி, 3 பேர் காயம்
Published on

ராய்கர்,

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் டம்பர் டிரக் மோதிய விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாரங்கர் தாலுகாவில் உள்ள படௌபாலி கிராமத்தில் சாலையைக் கடக்கும் போது டம்பர் டிரக் ஒன்று ஐந்து குழந்தைகள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி கிராம மக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலை தொடர்ந்து கோட்வாலி காவல் நிலைய நிர்வாகம் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

முன்னதாக சிறுவர்கள் குளத்தில் குளிக்க சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கடக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com