

பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மத்திய அரசு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை அனுப்பி வருகிறது. நேற்று முன்தினம் வரை 14 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து இருந்தன.
இந்த நிலையில் ஜார்க்கண்டில் இருந்து 120 டன் திரவ ஆக்சிஜன், ஒடிசாவில் இருந்து 121.91 டன் திரவ ஆக்சிஜனை சுமந்து கொண்டு 2 ஆக்சிஜன் ரெயில்கள் நேற்று ஒயிட்பீல்டு ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. அந்த 2 ரெயில்கள் மூலம் 241.91 டன் திரவ ஆக்சிஜன் வந்து இருந்தது. இதுவரை கர்நாடகத்திற்கு 1894.71 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மத்திய அரசிடம் இருந்து கிடைத்து உள்ளது.