

அகமத்நகர்,
மகாராஷ்டிராவின் அகமத்நகரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) இரண்டு உறுப்பினர்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் தேநீர் கடையில் அமர்ந்திருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களை பார்த்து சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களாக, யோகேஷ் ராலிபாட் மற்றும் ராஜேஷ் ராலிபாட் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.