கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்; 3 கிலோ கஞ்சா பறிமுதல்

உப்பள்ளி டவுன் அருகே கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்; 3 கிலோ கஞ்சா பறிமுதல்
Published on

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் அருகே டாலர்ஸ் காலனியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும், அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதுகுறித்தும் போலீசார் அவர்களிடம் கேட்டனர்.

அப்போது அவர்கள் கிருபாநகர் பகுதியை சேர்ந்த சான்வாஜ் (வயது 30), அயானலி (32) ஆகியோர் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்றுவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com