ஒரே வீட்டில் 2 மக்கள் பிரதிநிதிகள்: கணவர் எம்.பி., மனைவி எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ.வாக இருந்த மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் சாந்தகுமாரியை 3,706 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தியுள்ளார்.
ஒரே வீட்டில் 2 மக்கள் பிரதிநிதிகள்: கணவர் எம்.பி., மனைவி எம்.எல்.ஏ
Published on

திருவனந்தபுரம்,

கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கோங்காடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துளசி என்ற பெண் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் சாந்தகுமாரியை 3,706 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலுவான நிலையில் இருந்த தொகுதியில் காங்கிரஸ் வென்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் என்ன சுவாரசியம் என்றால் துளசியின் கணவர் வி.கே. ஸ்ரீகண்டன் பாலக்காடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். மனைவி வெற்றி பெற்றதன் மூலம் ஒரே வீட்டில் 2 மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com