மணிப்பூர் கலவர வழக்குகளை விசாரிக்க 2 தனிக்கோர்ட்டுகள் - சுப்ரீம் கோர்ட்டு

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தில் 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். கலவர வழக்குகளை சி.பி.ஐ.யும், என்.ஐ.ஏ.வும் விசாரித்து வருகின்றன.

விசாரணை நிலவரத்தை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்து வருகிறது. நேற்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

தனிக்கோர்ட்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தொகுக்குமாறும், அப்போதுதான். பாதிக்கப்பட்டவர்களும், வக்கீல்களும் உரிய ஆவணங்களை பார்த்துக்கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

மணிப்பூர் கலவரம் தொடர்பான சி.பி.ஐ. வழக்குகளை கையாள ஒரு தனிக்கோர்ட்டும், என்.ஐ.ஏ. வழக்குகளை கையாள மற்றொரு தனிக்கோர்ட்டும் அமைக்கவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com